தமிழ் எழுத, படிக்கத் தெரியுமா? ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை ரெடி!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்து அறக்கட்டளைத் துறைக்கு உட்பட்ட சென்னை, திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவில் மற்றும் பல கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்து அறக்கட்டளைத் துறைக்கு உட்பட்ட சென்னை, திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவில் மற்றும் பல கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர், ஓட்டுநர் என மொத்தம் 22 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி, தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.58 ஆயிரம் அளவு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தமிழ் எழுத, படிக்கத் தெரியுமா? ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை ரெடி!

மேலாண்மை : தமிழக அரசு

துறை : இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE)

பணியிடம் : சென்னை, திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவில் மற்றும் பல கோவில்கள்

பணி : அர்ச்சகர், ஓதுவார், தமிழ் புலவர், இளநிலை உதவியாளர், இரவு காவலர், ஓட்டுநர், கடை நிலை ஊழியர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி :

இளநிலை உதவியாளர் - 10-ம் வகுப்பு தேர்ச்சி, அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

டிரைவர் - 8-வது தேர்ச்சி பெற்றிருப்பதோடு, ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும். மேலும், குறைந்தது 1 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஜாடுமாலி, தோட்டி, முடிகொட்டகை மேஸ்திரி, இரவு காவலர் - தமிழ் நன்கு எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதுமானது.

உபகோவில் அர்ச்சகர், ஒதுவார் - தமிழ் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், ஆகம அறிவு மற்றும் ஆகம சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

குழாய் பராமரிப்பாளர் - ஐடிஐ தேர்ச்சி பெற்று குறைந்தது 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஒத்து மற்றும் தாளம் - தமிழில் நன்கு எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், இசைப் பள்ளியில் தேர்ச்சி சான்று பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,900 முதல் அதிகபட்சம் ரூ.58,600 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 22.10.2021 தேதிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு, சென்னை - 600077

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியினைத் தொடர்பு கொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNHRCE recruitment 2021: Application invited for Driver, Watchman, Junior Assistant & Other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+