இந்து சமய அறநிலையத்துறையில் அருமையான பணிவாய்ப்பு...ரெடியாகுங்க...!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்களை விரைவில் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/103/document_1.pdf
என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

இந்து சமய அறநிலையத் துறை தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காகத் தனித்துறை ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு 1 ஜனவரி 1960 முதல் செயல்பட்டு வருகிறது.
இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிர்வகத்துடன் அரசின் யானைகள் புத்துணர்வு முகாம், அன்னதானத் திட்டம் போன்ற பணிகளையும் இத்துறை செய்கிறது.

இந்து சமய அறநிலையத்துறையில் அருமையான பணிவாய்ப்பு...ரெடியாகுங்க...!!!

இந்து சமய திருக்கோயில்களின் வீடுகள், நிலங்கள், கடைகள் மற்றும் காலி இடங்கள் வாடகை நிர்ணயம் செய்தல் மற்றும் திருக்கோயில்களின் நிர்வாகத்தை இந்தத் துறை கவனிக்கிறது. மேலும், கோயில் பராமரிப்பு, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தல் ஆகியவையும் இந்து சமய அறநிலையத் துறையின் கடமையாக உள்ளது.

இத்துறையின் சார்பில் 2003 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களைச் சேர்ந்த யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கும் வகையில் நல வாழ்வு முகாம் நடத்தப்படுகிறது.

இந்த பெருமை வாய்ந்த இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள தூத்துக்குடி இணை ஆணையர் அலுவலகத்தில் தான் தற்போது ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையில் தற்போது ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலர்
என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி இம்மாதம் 17.01.2024 ஆகும்.

ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் கல்வி தகுதி:

ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயதுத்தகுதி:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15,700/- முதல் ரூ.62,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் மற்றும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

இணையதள முகவரி:

கூடுதல் விவரங்களுக்கு https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/103/document_1.pdf
என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has inviting applications for various posts like Driver, Office Assistant, Night Watchman. Eligible candidates can apply for this post. For more details please login into https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/103/document_1.pdf
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+