தமிழக அறநிலையத்துறையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு..!!

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில், சென்னை அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலில் அலுவலக உதவியாளர் மற்றும் பிற பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும், விருப்பமும் வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/12/Kapaleeshwarar-Temple-Official-Notification-Application-Form-PDF.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

இந்து சமய அறநிலையத் துறை தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காகத் தனித்துறை ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு 1 ஜனவரி 1960 முதல் செயல்பட்டு வருகிறது.
இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிர்வகத்துடன் அரசின் யானைகள் புத்துணர்வு முகாம், அன்னதானத் திட்டம் போன்ற பணிகளையும் இத்துறை செய்கிறது.

தமிழக அறநிலையத்துறையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு..!!

இந்து சமய திருக்கோயில்களின் வீடுகள், நிலங்கள், கடைகள் மற்றும் காலி இடங்கள் வாடகை நிர்ணயம் செய்தல் மற்றும் திருக்கோயில்களின் நிர்வாகத்தை இந்தத் துறை கவனிக்கிறது. மேலும், கோயில் பராமரிப்பு, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தல் ஆகியவையும் இந்து சமய அறநிலையத் துறையின் கடமையாக உள்ளது.

இத்துறையின் சார்பில் 2003 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களைச் சேர்ந்த யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கும் வகையில் நல வாழ்வு முகாம் நடத்தப்படுகிறது.

இந்த பெருமைவாய்ந்த இந்து சமய அறநிலையத்துறையில்தான் தற்போது பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள்:

அலுவலக உதவியாளர் மற்றும் பிற பணிகளுக் என 4 பணியிடங்கள் இந்தத் துறையில் காலியாக உள்ளன.

இந்து சமய அறநிலையத்துறை பணியிடங்களுக்கான வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 01.07.2023 கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியமானது.

இந்து சமய அறநிலையத்துறை பணியிடங்களுக்கான கல்வி தகுதி:

இந்து சமய அறநிலையத்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர், அலுவலக உதவியாளர் பிரிவுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியும், டிரைவர் பிரிவுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியும், ஓட்டுநர் உரிமமும், நூலகர் பிரிவுக்கு B.Lib.Sc பட்டமும் பெற்றிருக்க வேண்டும்
இந்து சமய அறநிலையத்துறை பணியிடங்களுக்கு சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் நபருக்கு பணிக்கேற்ப குறைந்தபட்சம் ரூ.15,900 முதல் அதிகபட்சம் ரூ.58,600/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்து சமய அறநிலையத்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வோர் இந்து சமயத்தைச்‌ சார்ந்தவர்கள்‌ 27.01.2024 மாலை 5.30 மணிக்குள்‌ விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்காணும் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

விண்ணப்பங்கள்‌ அனுப்ப வேண்டிய முகவரி:

இணண ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோவில்,
மயிலாப்பூர், சென்னை-4.

இணையதள முகவரி:

கூடுதல் விவரங்களுக்கு https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/12/Kapaleeshwarar-Temple-Official-Notification-Application-Form-PDF.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNHRCE has invites applications for the various posts. Interested persons can apply for this posts. for more details please login into https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/12/Kapaleeshwarar-Temple-Official-Notification-Application-Form-PDF.pdf.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+