தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் அருள்மிகு தேனி மாவட்ட சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள ஓதுவார் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1LSk1c8i8UxKScYVxEbu68Z2TOIOpfH38/view?pli=1 என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
இந்து சமய அறநிலையத் துறை தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காகத் தனித்துறை ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு 1 ஜனவரி 1960 முதல் செயல்பட்டு வருகிறது.
இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிர்வகத்துடன் அரசின் யானைகள் புத்துணர்வு முகாம், அன்னதானத் திட்டம் போன்ற பணிகளையும் இத்துறை செய்கிறது.

இந்து சமய திருக்கோயில்களின் வீடுகள், நிலங்கள், கடைகள் மற்றும் காலி இடங்கள் வாடகை நிர்ணயம் செய்தல் மற்றும் திருக்கோயில்களின் நிர்வாகத்தை இந்தத் துறை கவனிக்கிறது. மேலும், கோயில் பராமரிப்பு, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தல் ஆகியவையும் இந்து சமய அறநிலையத் துறையின் கடமையாக உள்ளது.
இத்துறையின் சார்பில் 2003 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களைச் சேர்ந்த யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கும் வகையில் நல வாழ்வு முகாம் நடத்தப்படுகிறது.
இந்த பெருமைவாய்ந்த தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள அருள்மிகு தேனி மாவட்ட சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் திருக்கோயிலில்தான் ஓதுவார் பணியிடம் காலியாக உள்ளது.
ஓதுவார் பணியிடத்துக்கான கல்வி தகுதி:
ஓதுவார் பணியிடத்துக்கான விண்ணப்பிக்க தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனத்தில் நடத்தப்படும் தேவார பாடசாலையில் மூன்று ஆண்டுகள் பயின்றமைக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ஓதுவார் பணியிடத்துக்கான வயது வரம்பு:
01.01.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
ஓதுவார் பணியிடத்துக்கான சம்பள விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ஒன்றுக்கு ரூ.12,600/- முதல் ரூ.39,900/- வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுயசான்றொப்பமிடப்பட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு 15-12-2023 முதல் 15-01-2024 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1LSk1c8i8UxKScYVxEbu68Z2TOIOpfH38/view?pli=1 என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












