சென்னை: தமிழ் எழுத, படிக்க தெரிந்தவர்கள், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் ஊழியராக பணிபுரிய முடியும். அது குறித்த விபரம் என்னனு பார்ப்போம்....
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிர்வாகம் : தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை
மேலாண்மை : மாநில அரசு
பணி : Junior Assistant, Ticket Seller, Multiple Worker, Sweeper, Driver
மொத்த காலிப் பணியிடங்கள் : 38
கல்வித் தகுதி :
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல், அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் படித்திருக்க வேண்டும்.
ஊதியம் :
தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு ஏற்ப, குறைந்தது ரூ.7,950/- முதல் அதிகபட்சம் ரூ.65,500/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
https://hrce.tn.gov.in/hrcehome/index.php
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்து மதத்தினர் மட்டும், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரியில் விண்ணப்பங்களை பெற்று, படிவத்தை பிழையின்றி பூர்த்தி செய்து, கடைசி நாளான ஜூலை 16 மாலை 5.45 மணிக்குள், அறிவிப்பாணையில் வழங்கப்பட்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி, நெல்லித்துறை அஞ்சல், மேட்டுப்பாளையம் வட்டம், கோவை மாவட்டம், மின் அஞ்சல் - 641305.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 16.07.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் திருக்கோயில் அலுவலகத்தில், விண்ணப்பக் கட்டணமாக, ரூ.100/- செலுத்தி, விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.
தேர்வு முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தெரிவு செய்யப்படுவர்.


Click it and Unblock the Notifications












