Tiruttani Subramanyaswamy Temple Recruitment 2023: உங்க ஊர் கோவிலில் ரூ.58 ஆயிரத்தில் வேலை...!

திருவள்ளூர் மாவட்டம், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலிலில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு, இறை நம்பிக்கை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE)

மேலாண்மை : மாநில அரசு

திருத்தணி முருகன் கோயிலில் பணி வாய்ப்பு...!

பணி விவரம்

v அர்ச்சகர்

v ஓதுவார்

v பரிசாரகர்

v வேதபாராயணம்

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.08.2023

பணியிட விவரங்கள் குறித்த முழு விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்வையிடவும்.

கல்வித்தகுதி

அர்ச்சகர்

அர்ச்சகர் பணிக்கு, தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்கள் நடத்துகின்ற ஏதேனும் ஆகமப் பயிற்சி மையத்தில் தொடர்புடைய பிரிவில் ஓராண்டு பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஓதுவார்

ஓதுவார் பணிக்கு பயிற்சி வகுப்பு மூன்றாண்டு நிறைவு செய்வதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வேத பாராயணம் பணிக்கு அரசு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில், மூன்றாண்டு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Ø அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை விண்ணப்பதாரர்கள் கொண்டிருக்க வேண்டும். இறை நம்பிக்கை உடையவராகவும், இந்து மதத்தை சேர்ந்தவராகவும் கொண்டிருத்தல் வேண்டும்.

Ø குறைந்தபட்ச தகுதிகளாக, தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Ø பணிகளுக்கு தொடர்புடைய துறையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சான்றிதழ் பெற்றவர்களே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஊதிய விவரம்

Ø அர்ச்சகர் - ரூ.11,600 -ரூ.36,800

Ø ஓதுவார் - ரூ.18,500 -ரூ.58,600

Ø பரிசாரகர் - ரூ.15,900 - ரூ.50,400

Ø வேத பாராயணம் - ரூ.15,700 - ரூ.50,000

வயது வரம்பு

Ø விண்ணப்பதாரர் வயதானது, 01.07.2023 அன்று 18 வயதை பூர்த்தி செய்தவராகவும், 35 வயதிற்கு உட்பட்டவராகவும் வேண்டும்.

Ø வயது வரம்பு சலுகை குறித்த விவரங்களை அறிய, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Ø பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

Ø பணியிடங்களின் எண்ணிக்கை, பதவி உயர்வு, பணி ஓய்வு உள்ளிட்ட நிர்வாக காரணங்களுக்காக மாறுதலுக்கு உட்பட்டதாகும்.

Ø நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அலுவலக வேலை நேரங்களில், நேரில் சென்று கேட்டுக் தெரிந்து கொள்ளலாம்.

Ø ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

Ø விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை www.tnhrce.gov.in அல்லது திருக்கோயில் வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில் மட்டுமே பூர்த்தி செய்து புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

Ø கூடுதல் விபவரங்களை கோயில் அலுவலகத்தில், அலுவலக நாட்களில் நேரடியாக கேட்டு தெரிந்துக் கொள்ளாலம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Ø பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 'இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணிகை

திருவள்ளூர் - 631 209' என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

Ø பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.08.2023 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்று கொள்ளப்படும்.

Ø அதன் பின் வந்து சேரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

Ø விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்குரிய சான்றுகள் மற்றும் பிற ஆவணங்களுக்கு சான்றிட்ட நகல் மட்டுமே அனுப்ப வேண்டும். அசல் சான்றிதழை நேர்காணலின் போது கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். கேட்கப்பட்ட சான்றிதழ்கள் இன்றி பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்கப்படாது.

மிஸ் பண்ணிடாதீங்க...! ஒரு முறை கிளிக் பண்ணுங்க...!

முதலில் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் அல்லது திருக்கோயில் அதிகாரப்பூர்வ https://tiruttanimurugan.hrce.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

home page- ல்   இடம்பெறும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

புதிதாக தோன்றிய பக்கத்தில், பணி குறித்தான வேலைவாய்ப்பை விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அடுத்ததாக விண்ணப்ப அறிவிக்கை இருக்கும்.

இந்தப் பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய தகுதி சான்றுகளுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ கோயில் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

https://hrce.tn.gov.in/hrcehome/index.php

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விபரம்

https://tiruttanimurugan.hrce.tn.gov.in/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Department of Hindu Religious Charities has issued a notice that those who are eligible and interested can apply for the vacant positions of Priest, Parisarakar, Veda Parayanam, Oduvar, etc.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+