அண்ணாசாமி தம்பிரான் என்பவர், தன் நாக்கை அறுத்து திருத்தணி முருகனுக்கு காணிக்கையாக செலுத்தியவர் தான், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் தோன்ற மூலக்காரணம்.
நாக்கை அறுத்து இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் வழக்கத்துக்கு, 'பாவாடம்' என்று பெயர்.

இத்தகைய பெயர் பெற்ற தலத்தில், பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை, இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. இறை நம்பிக்கை, இந்து மதத்தை சார்ந்தவர்கள், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
நிர்வாகம் : அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE)
மேலாண்மை : மாநில அரசு
பணி விவரம்
· இளநிலை உதவியாளர்
· தட்டச்சர்
· ஓட்டுநர்
· உதவி மின் பணியாளர்
· நாதஸ்வரம்
· உதவி அர்ச்சகர்· உதவி பரிச்சாரகம்
· உதவி சுயம்பாகம்
· வேதபாராய
ணம்விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி
விண்ணப்பிக்க கடைசி தேதி - 04.10.2022
பணியிடங்கள் எண்ணிக்கை: 23இளநிலை
உதவியாளர்
ஊதியம்: Rs.18500-58600/-
கல்வித்தகுதி
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட, அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
தட்டச்சர்
ஊதியம்: Rs.18500-58600/-
கல்வித்தகுதி
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட, அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல்; (I) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது (II) தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது (III) ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை ஆனால், இனம் I ல் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியை பெற்ற விண்ணப்பதாரர்கள் பெறாத தேர்வில் இனம்(II)ல் அல்லது இனம் (III) ல் உள்ள தகுதிகளை பெற்ற விண்ணப்பதாரர்கள் மேற்சொன்ன முன்னுரிமை வரிசையில் நியமிக்கப்படலாம்.
கணினி பயன்பாடு மற்றும் அலுவலகத் தானியக்கத்தில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஓட்டுநர்
ஊதியம்: Rs.18500-58600/-
கல்வித்தகுதி
8-ம் வகுப்பு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இலகுரக வாகனம் அல்லது கனரக வாகனம் ஓட்டுநர் உரிமமும் முதலுதவி குறித்த சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். ஒராண்டு ஒட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உதவி மின் பணியாளர்
ஊதியம்: Rs.16600-52400/-
கல்வித்தகுதி
அரசால்/அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின்/ மின்கம்பி பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
நாதஸ்வரம்
ஊதியம்: Rs.19500-62000/-
கல்வித்தகுதி
தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய அங்கீகரிக்கப்பட்ட யாதொரு அரசால் யாதொரு நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப் பள்ளிகளிலிருந்து இது தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
உதவி அர்ச்சகர்
ஊதியம்: Rs.15900-50400/-
கல்வித்தகுதி
தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் ஒராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
உதவி பரிச்சாரகம்
ஊதியம்: ரூ.10,000 - ரூ.31,500
கல்வித்தகுதி
தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் கோயில்களின் பழக்க வழக்கங்களுக் கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
உதவி சுயம்பாகம்
ஊதியம்: Rs.10000-31500/-
கல்வித்தகுதி
தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் 2. கோயில்களின் பழக்க வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வேதபாராயணம்
ஊதியம்: Rs.15700-50000/-
கல்வித்தகுதி
· விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதுமில்லை என்ற சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
· ஒரு விண்ணப்பதாரர் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும்போது, தொடர்புடைய பதவியை குறிப்பிட்டு தனித்தனியே விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.
· ஒரு விண்ணப்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
· விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்குரிய சான்றுகள் மற்றும் பிற ஆவணங்களுக்கு சான்றிட்ட நகல் மட்டுமே அனுப்ப வேண்டும். அசல் சான்றிதழை நேர்காணலின் போது கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
· பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவு தபாலில் ஒப்புதல் அட்டையுடன் மட்டுமே அனுப்ப வேண்டும்.
· விண்ணப்பங்களை அனுப்பும் போது மேலுறையின் மீது பதவியின் பெயரை குறிப்பிட்டு பதிவு அஞ்சலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
மிஸ் பண்ணிடாதீங்க...! ஒரு முறை கிளிக் பண்ணுங்க...!
https://hrce.tn.gov.in/hrcehome/index.php
பணி பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டுமா?
https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/137/document_1.pdf


Click it and Unblock the Notifications

