TNHRCE Recruitment 2022: சித்தி புத்தி விநாயகர் கோயிலில் ரூ.41 ஆயிரத்தில் வேலை...!

ராயப்பேட்டை முத்து முதலி தெருவில் உள்ள அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வர் திருக்கோயிலில், அர்ச்சகர், ஓதுவார், கணினி இயங்குபவர், மின் பணியாளர், காவலர், துப்புரவாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை, இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.

நிர்வாகம் : அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வர் திருக்கோயில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE)

மேலாண்மை : மாநில அரசு

சென்னை கைய்ஸ் ரூ.41 ஆயிரத்தில் வேலை...!

பணி விவரம்

· கணினி இயக்குபவர்

· மின் பணியாளர்

· அர்ச்சகர்

· ஒதுவார் (மூன்றாம் அழைப்பு)

· சுயம்பாகி

· மேளக்குழு (நாதஸ்வரம் பணிக்கு)

· பகல் காவலர்

· இரவு காவலர்

· துப்பரவாளர்

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

விண்ணப்பிக்க கடைசி தேதி - 17.11.2022

பணியிடங்கள் எண்ணிக்கை: 9

Ø கணினி இயக்குபவர்

ஊதியம்: Rs.13200-41800/-கல்வித்தகுதி:

கணினி இயக்குபவர் பதவிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில், டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

Ø மின் பணியாளர்

ஊதியம்: Rs.12600-39900/-

கல்வித்தகுதி

மின் பணியாளர் பணிக்கு, ஐ.டி.ஐ., படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மின் உரிம வாரியத்தின் பி சான்று பெற்றிருக்க வேண்டும்.

Ø அர்ச்சகர்

ஊதியம்: Rs.13200-41800/-

கல்வித்தகுதி

தமிழ் மொழியில், எழுத படிக்க தெரிந்திருப்பதுடன் ‌ ஆகமப் பள்ளி அல்லது வேதபாட சாலையில்‌ குறைந்தபட்சம்‌ ஒராண்டு படிப்பை முடித்து, சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Ø ஓதுவார்(மூன்றாம் அழைப்பு)

ஊதியம்: Rs.12600-39900/-

கல்வித்தகுதி

ஓதுவார்‌ பணிக்கு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் நடத்தும் தேவாரப் பாடசாலையில்‌ தொடர்புடைய துறையில், மூன்றாண்டு படிப்பை படித்திருக்க வேண்டும்.

Ø சுயம்பாகிஊதியம்: Rs.13200-41800/-

கல்வித்தகுதி

தமிழ் மொழியில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். சுயம்பாகி பணிக்கு‌ ஆகம விதிப்படி நைவேத்தியம்‌ மற்றும்‌ பிரசாதம்‌ தயார்‌ செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்

Ø மேளக்குழு(நாதஸ்வரம் பணிக்கு)

ஊதியம்: Rs.15300-48700/-

கல்வித்தகுதி

தமிழ்நாடு அரசு நிறுவனம்‌ அல்லது பல்கலைக்கழக மானியக்குழுவால்‌ அங்கீகரிக்கப்பட்ட இசைப் பள்ளியில்‌ சான்று பெற்றிருக்க வேண்டும்.

Ø பகல் காவலர், இரவு காவலர்

ஊதியம்: Rs.11600-36800/-

கல்வித்தகுதி

பகல் காவலர், இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். மேலும், தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Ø துப்புரவாளர்

ஊதியம்: Rs.10000-31500/-

கல்வித்தகுதி

தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். நல்ல உடல் தகுதியையும் கொண்டிருக்க வேண்டும்.

சென்னை கைய்ஸ் ரூ.41 ஆயிரத்தில் வேலை...!

வயது வரம்பு

Ø விண்ணப்பதாரர் 01.07.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

Ø கல்வித்தகுதி, வயதுவரம்பு. நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அலுவலக வேலை நேரங்களில், நேரில் சென்று கேட்டுக் தெரிந்து கொள்ளலாம்.

Ø விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Ø பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், செயல்அலுவலர், அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோயில், ராயப்பேட்டை, சென்னை-14 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Ø பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 17.11.2022 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்று கொள்ளப்படும். அதன் பின் வந்து சேரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

Ø விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை

மறக்காதீங்க...!

· விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதுமில்லை என்ற சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.

· ஒரு விண்ணப்பதாரர் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும்போது, தொடர்புடைய பதவியை குறிப்பிட்டு தனித்தனியே விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.

· ஒரு விண்ணப்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

· விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்குரிய சான்றுகள் மற்றும் பிற ஆவணங்களுக்கு சான்றிட்ட நகல் மட்டுமே அனுப்ப வேண்டும். அசல் சான்றிதழை நேர்காணலின் போது கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.· பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவு தபாலில் ஒப்புதல் அட்டையுடன் மட்டுமே அனுப்ப வேண்டும்.

மிஸ் பண்ணிடாதீங்க...! ஒரு முறை கிளிக் பண்ணுங்க...!

https://hrce.tn.gov.in/hrcehome/index.php

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Siddhi Buddhi Vinayagar Temple Jobs 2022: Belief in God and Hinduism? So, Hindu Religious Charities Department is providing job wise for you. In that line, applications are invited for various vacancies at Arulmiku Siddhi Buddhi Vinayagar and Sundareswar temple in Rayapetta, Chennai.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X