தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள 1178 வனத்துறை அதிகாரி, வனத்துறை காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலிப் பணியிடம் : 1178
பதவிகள்:-
வனத்துறை அதிகாரி : 300
வனத்துறைக் காவலர் : 726
வனக்காவலர் : 152
கல்வித் தகுதி:-
வனத்துறை அதிகாரி:
- ஏதேனும் ஓர் அறிவியல் சார்ந்த துறையில் பட்டம்
வனத்துறைக் காவலர்:
- இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வனக்காவலர்:
- இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் தமிழக அரசின் போக்குவரத்து ஆணையத்தால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம்:-
வனத்துறை அதிகாரி : ரூ.35900 முதல் ரூ.113500 வரை
வனத்துறைக் காவலர் : ரூ.18200 முதல் ரூ.57900 வரை
வனக்காவலர் : ரூ.18200 முதல் ரூ.57900 வரை
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.forests.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடல் தரநிலை சரிபார்ப்பு உள்ளிட்டவை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 15.10.2018
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 05.11.2018
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிந்துகொள்ளவும், விண்ணப்பிக்கவும் www.forests.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












