TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே மார்ச் 16ம் தேதி வரையில் அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது மார்ச் 23ம் தேதி வரையில் கால அவகாசம் நீட

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே மார்ச் 16ம் தேதி வரையில் அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது மார்ச் 23ம் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

TNEB TANGEDCO: மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழ்நாடு மின்வாரியத்தில் மின்னியல் பிரிவில் 400 காலியிடங்களும், இயந்திரவியல் பிரிவில் 125 காலியிடங்களும், கட்டிடவியல் பிரிவில் 75 காலியிடங்களும் என மொத்தம் 600 பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 8 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, விண்ணப்பப்பதிவு கடந்த ஜனவரி 24 ஆம் தேதி முதல் பிப்ரவரி 24 என்று அறிவிக்கப்பட்டு விண்ணப்பப் பதிவு நடைபெற்று வந்தது.

இருப்பினும், இதுகுறித்தான முறையான அறிவிப்பு இல்லாத காரணத்தினால் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கச் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்குக் கடைசி தேதி மார்ச் 16 ஆம் தேதி வரையில் நீட்டிப்பு செய்து மின்வாரியம் உத்தரவிட்டிருந்தது.

தற்போது தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களின் கோரிக்கையைப் பரிசீலித்து அவர்களின் நலன் கருதி, இந்தத் தேர்வுகளைத் தமிழ் மொழியிலும் நடத்திட முடிவு செய்து கணினி வழியில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வருகிற 23-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு மின்வாரியத்தின் இணையதளத்தை அணுகலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNEB TANGEDCO Recruitment 2020: Last Date extended For assistant engineer recruitment
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X