திண்டுக்கல் மின் பகிர்மான வட்டத்தில் காலியாக உள்ள கேங்மேன் பணியிடத்தினை நேரடியாக நிரப்பிடுவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதித் தோ்வு டிசம்பர் 2ம் தேதி முதல் 11ஆம் தேதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் காலியாக உள்ள கேங்மேன் (பயிற்சி) பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளது. இதற்காக, திண்டுக்கல் மின் பகிர்மான வட்டத்திற்கு 1,700 பேருக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடற்தகுதித் தோ்வு டிசம்பர் 2 முதல் 11ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.
எனவே, இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்கள் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட அனுமதி சீட்டு மற்றும் சரிபாா்ப்பு பட்டியலுடன் வர வேண்டும். திண்டுக்கல் அங்குநகா் துணை மின் நிலைய வளாகத்தின் நடைபெறும் பணிநியமன முகாமில், அவரவருக்கு நிர்ணயிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் பங்கேற்க வேண்டும்.
புகைப்படம் அடையாள அட்டை, மாற்று சான்றிதழ் அல்லது கடைசியாக படித்த கல்வி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட பதிவுதாள், 5, 8 அல்லது 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் ஏதேனும் ஒன்று, சாதி சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்று அல்லது முன்னுரிமை வகுப்பு பதிவு செய்திருந்தால் மட்டும் பண்பு மற்றும் ஒழுக்கச்சான்று, கடைசியாக பயின்ற கல்வி கூடத்திலிருந்து பெறப்பட்ட சான்று ஒன்று மற்றும் விண்ணப்பதாரரைத் தனிப்பட்ட முறையில் தெரிந்த அதிகாரம் பெற்ற அலுவலரிடமிருந்து 01.11.2019-க்கு பின்னா் பெறப்பட்ட சான்று, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை (பதிவு செய்திருந்தால் மட்டும்) ஆகிய சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகலுடன், அசல் சான்றையும், சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தவறாமல் எடுத்து வர வேண்டும். இவை சரிபார்க்கப்பட்ட பின்னர் உடல் தகுதி தேர்வுகளில் கலந்துகொள்ளலாம் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












