அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேர்வதற்காக ஜூன் 2-ம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பத்தில் ஆன்லைன் வாயிலாக 1,59,631 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கு ஜூன் 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக கலந்தாய்வு நடைபெறும் என்று பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

மொத்தம் 42 மையங்களில் பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அப்போதே சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணியும் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்டுள்ள ரேண்டம் எண்ணை கொண்டு ஒரே மதிப்பெண்களை பெற்ற 2க்கும் மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய இடங்கள் ஒதுக்கப்படும்.
இந்தாண்டு பெறப்பட்ட விண்ணப்பங்களில் 1,00214 இடங்களுக்கு மாணவர்களும், 59,416 இடங்களுக்கு மாணவிகளும், ராணுவம் மற்றும் விளையாட்டு கோட்டாவில் 2171 பேரும் விண்ணப்பித்துள்ளனர். டிடி மூலம் விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை 270 என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












