நெல்லைக்காரங்களா இருக்கணும்...!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், திருநெல்வேலி மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பட்டியல் எழுத்தர், பருவகால காவலர் ஆகிய பணியிடங்களுக்கு, தகுதி, ஆர்வமுள்ள ஆண்/பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

அறிவிக்கப்பட்ட பணியிடங்களில், பட்டியல் எழுத்தர்/உதவுபவர் பணிக்கு மட்டும் ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கலாம்.

நெல்லை யூத்ஸ் கொஞ்சம் கவனிக்கவும்...!

நிர்வாகம்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (Tamil Nadu Civil Supplies Corporation)

மேலாண்மை: மாநில அரசு

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.09.2022

பணி/ காலிப் பணியிடங்கள் விவரங்கள்

• பருவகால பட்டியல் எழுத்தர் - 59

• பருவகால உதவுபவர் - 54

 

• பருவகால காவலர் - 52

மொத்த பணியிடங்கள் : 165

வயது வரம்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, அதிகபட்ச வயது செப்.1,2022படி, 32 வயதாக இருக்க வேண்டும். வயது தளர்வு உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக தெரிந்து கொள்ளவும்.

கல்வி தகுதி

அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில், பருவகால பட்டியல் எழுத்தர் பதவிக்கு B.Sc in Agriculture and Engineering, பருவகால உதவுபவர் பதவிக்கு பிளஸ் 2, பருவகால காவலர் பதவிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்

• பருவகால பட்டியல் எழுத்தர் - ரூ.5,285/- + ரூ. 3,499/-

• பருவகால உதவுபவர் - ரூ.5,218/- + ரூ.3,499/-

• பருவகால காவலர் - ரூ.5,218/- + ரூ.3,499/-

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை

• விண்ணப்பதாரர்கள் திருநெல்வேலி மாவட்டத்தை இருப்பிடமாக கொண்டிருக்க வேண்டும்.

• ஆர்வமும், ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் வாயிலாக, அஞ்சல் வாயிலாக(ஆஃப்லைன்) விண்ணப்பிக்க வேண்டும்.

• விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன், செப்டம்பர் 12 அன்று மாலை 5:00 மணிக்குள் அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

மண்டல மேலாளர்,

மண்டல அலுவலகம்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்,

9F, St தாமஸ் ரோடு மகாராஜா நகர் பாளையங்கோட்டை - 627011.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Eligible and interested candidates can apply for 165 vacancies in Tamilnadu Consumer Goods Corporation.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X