தமிழக அரசிற்கு உட்பட்ட விழுப்புரம் அரசு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் காலியாக உள்ள பருவகால எழுத்தர் மற்றும் பருவ கால காவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 156 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : விழுப்புரம் அரசு நுகர்பொருள் வாணிபக்கழகம் (TNCSC)
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 156
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :
- பருவகால எழுத்தர் - 78
- பருவ கால காவலர் - 78
கல்வித் தகுதி :
பருவகால எழுத்தர் - இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பருவ கால காவலர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : குறைத்தபட்சம் 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
- பருவகால எழுத்தர் - ரூ. 6,549
- பருவ கால காவலர் - ரூ. 6,408
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களுடைய சான்றுகளுடன் 15.11.2021-க்குள் மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், த.நா.நு.பொ.வா.கழகம், நெ.ர, ஹாஸ்பிட்டல் ரோடு, விழுப்புரம்-605 602 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், 15.11.2021 மாலை 5.00 மணிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.tncsc.tn.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பு விளம்பரத்தினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












