8-வது தேர்ச்சியா? தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!

தமிழக அரசிற்கு உட்பட்டு நாகப்பட்டினம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்டு நாகப்பட்டினம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 304 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 8, 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயனடையலாம்.

8-வது தேர்ச்சியா? தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!

நிர்வாகம் : தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC)

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 304

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • பருவகால பட்டியல் எழுத்தர் - 119 பணியிடங்கள்
  • பருவகால உதவுபவர் - 127 பணியிடங்கள்
  • பருவகால காவலர் - 58 பணியிடங்கள்

கல்வித் தகுதி :

பருவகால பட்டியல் எழுத்தர் - ஏதேனும் ஒரு இளநிலை அறிவியல் (B.Sc) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பருவகால உதவுபவர் - 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பருவகால காவலர் - அரசு பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு தேச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 18 வயது முதல் 32 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.4,049 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை 10.11.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

முதுநிலை மண்டல மேலாளர்‌, தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌, நாகப்பட்டினம் மண்டல அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் 10.11.2021 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப படிவம்‌ மண்டல அலுவலகத்தில்‌ அலுவலக வேலை நாட்களில்‌ இலவசமாக பெற்றுக்‌ கொள்ளலாம்‌.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினப் பெறவும் www.tncsc.tn.gov.in அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNCSC Recruitment 2021: Application invited for Security, Watchman & other post at nagapattinam
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+