சிவகங்கை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் 63 உதவியாளர் பணி

Written By: kaniselvam.p

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறையின், சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் 31 ஆம் தேதிக்குள் அஞ்சல் வழியாக வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்63
பணிகால்நடை பராமரிப்பு உதவியாளர்
தகுதி 10ஆம் வகுப்புடன் தேர்ச்சி பெற்றவர்களும், தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். 
வயதுவரம்பு 01.07.2015 தேதியின்படி 18 - 30க்குள். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 
சம்பளம்மாதம் ரூ.15,900 - 50,400

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மண்டல இணை இயக்குநர்,
கால்நடை பராமரிப்புத்துறை,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
சிவகங்கை 630 562

விண்ணப்பத்துடன் அஞ்சல்வில்லை ஒட்டிய விண்ணப்பதாரரின் தற்போதைய இருப்பிட முழு முகவரியுடன் கூடிய அஞ்சல் உறையை இணைத்து அனுப்ப வேண்டும்.

அஞ்சல் உறை இணைத்து அனுப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் விண்ணப்பதாரர்களின் சான்று சரிபார்க்கப்பட்டு மாவட்ட இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம்.

அதிகாரப்பூர்வ தளம்:

 

2. அறிவிப்பு லிங்க்

இடது கை பக்கம் உள்ள விண்ணப்ப லிங்க் விவரத்தை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறியலாம்

4. கேட்கப்பட்டுள்ள

கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகலோடு குறிப்பிட்ட அஞ்சல் முகவரிக்கு வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

 

 

English summary
TNAHD Sivaganga Recruitment 2018 – Apply offline 63 Animal Husbandry Assistant Posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia