திருப்பூர் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்கள், சைக்கிள் ஓட்டத் தெரிந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு tiruppur.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ஆய்வக உடனாள் பணிக்கு 2 பணியிடங்களும், அலுவலக உதவியாளர் இடத்திற்கு 5 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது.
இப்பணியிடங்களுக்கு, குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், அரசு விதிமுறைப்படி அருந்ததியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் - 35, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) - 32, பொதுப்பிரிவினர் - 30 என வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
ஆய்வக உடனாள் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு விரும்புவோர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியும், சைக்கிள் ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு முறை : இப்பணியிடங்களுக்கு நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://tiruppur.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, 4/583, வீரபாண்டி பிரிவு, பல்லடம் ரோடு, திருப்பூர் - 641 605
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நேரடியாக விண்ணப்பப் படிவம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












