தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் (TN TRB) சார்பில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,060 விரிவுரையாளர் பணிக்கான அறிவிப்பு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த 2019 நவம்பர் மாதம் வெளியானது. trb.tn.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர் வேலை!
அதில், சிவில், மெக்கானிக்கல், EEE, ECE, ஐடி, ஆங்கிலம், கணிதம், இயற்பியல் என மொத்தம் 15 துறைகளில் 1,060 காலிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியானது. தற்போது, இதற்கான விண்ணப்பப்பதிவு இன்று முதல் (ஜனவரி 22 தொடங்கியுள்ளது.
TN TRB Lecturer Recruitment 2020 முக்கிய நாட்கள்:
- அறிவிப்பு வெளியான நாள் : 27 நவம்பர் 2019
- விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள் : 22 ஜனவரி 2020 (இன்று முதல்)
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12 பிப்ரவரி 2020
- கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள் : மே முதல் வாரம் (தேதி பின்னர் அறிவிக்கப்படும்)
இத்தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
கல்வித் தகுதி:-
பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர், அந்தந்த துறைகளில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ முடித்திருக்க வேண்டும்.
இன்ஜினியரிங் அல்லாத துறைகளுக்கு முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இத்தகைய கல்வித்தகுதிக்கு இணையான படிப்பு முடித்தவர்களும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். நேரடியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.