12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அரசு பணியிடத்தில் பணிபுரியும் அற்புதமான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. தமிழக மாவட்ட சமூக பாதுகாப்புத் துறையின் (TN SWD) கட்டுப்பாட்டில் உள்ள அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் அசிஸ்டெண்ட் கம் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் (Assistant Cum Data Entry Operator) பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு
https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2023/11/2023112884.pdf என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
அரியலூர் மாவட்டம் (Ariyalur district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் அரியலூர் ஆகும். இந்த மாவட்டம் 1,940.00 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.

மிகச் சிறந்த சோழ மன்னர்களில் ஒருவரான, ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட மிகப் பழமையான கங்கைகொண்ட சோழபுரம் கோயில், இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாகும். பிரம்மாண்டமான முதுகெலும்பில்லாத உயிரினங்கள் மற்றும் தாடை மீன்களின் பல புதைபடிவங்கள், டைனோசர் முட்டைகள் போன்றவை இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதைபடிவங்களை பாதுகாப்பதற்கு கீழப்பழூரில் ஒரு ஆன்-சைட் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில், சிமெண்ட் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன.
ஜனவரி 1, 2001-ல் பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் மார்ச் 31, 2002-ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பொருளாதாரத்தை காரணம் கூறி அரியலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007-ல் உருவாக்கப்பட்டது.
இம்மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம் ஆகிய 2 வருவாய் கோட்டங்களும், அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் ஆகிய 4 வருவாய் வட்டங்களும், 15 உள்வட்டங்களும், 195 வருவாய் கிராமங்களும் கொண்டது.
இந்த பெருமைமிகு அரியலூரில் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில்தான், அசிஸ்டெண்ட் கம் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்(Assistant Cum Data Entry Operator) பதவிக்குத்தான் தற்போது ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் 12ம் வகுப்பு + கணினி பயிற்சிக்கான சான்றிதழ் அல்லது 12ம் வகுப்பு + டிப்ளமோ(Diploma) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 42 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
பணிக்கு தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.13,240/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
அசிஸ்டெண்ட் கம் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்(டிசம்பர் 14) என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கூடுதல் விவரங்களுக்கு
https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2023/11/2023112884.pdf என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












