8-வது தேர்ச்சியா? சென்னையிலே அரசு வேலை..!

தமிழக அரசின் கீழ் உட்பட்டுச் செயல்பட்டு வரும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை (பயிற்சிப் பிரிவு) சென்னை ஆணையரகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சியா? சென்னையிலே அரசு வேலை..!

 

நிர்வாகம் : வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, சென்னை ஆணையரகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : அலுவலக உதவியாளர்

காலியிடங்கள் : 06

கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • 01.01.2019 தேதியின்படி பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 32 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
  • (பத்தாம் வகுப்புக்கு மேல் தகுதி பெற்றவர்களுக்கு உச்சபட்ச வயதுவரம்பு இல்லை.)

சம்பளம் : மாதம் ரூ.15,700 மற்றும் கூடுதலாக இதர சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பப்படிவம் மற்றும் விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணணயதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : நிர்வாக அலுவலர் (பணியமைப்பு), வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை (பயிற்சிப் பிரிவு) கிண்டி, சென்னை - 32

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 15.02.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://skilltraining.tn.gov.in/DET/PDF-Files/Advertisement_OA_Vacanct.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Skill Training Recruitment 2019, Apply skilltraining.tn.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X