தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகைப் பிரிவு) பணியிடங்களுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க செப்டம்பர் 28ம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில் தற்போது கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் பணியில் விரல் ரேகைப் பணியிடங்களுக்கான காலியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி முதல் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை இணையத்தில் சமர்ப்பிக்கலாம். செப்டம்பர் 28ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாள் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இத்தேர்வுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி தற்போதும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2018 அக்டோபர் 13ம் தேதி இரவு 11.50 மணி வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி http://www.tnusrbonline.org/ ஆகும்.


Click it and Unblock the Notifications
