திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய மாணவர் படை அலுவலகத்தில் (NCC) காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.62 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய மாணவர் படை (NCC)
பணியிடம் : திருச்சி, தேசிய மாணவர் படை அலுவலகம்
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
- ஓட்டுநர் - 02
- அலுவலக உதவியாளர் - 01
கல்வித் தகுதி :
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், இலகுரக மற்றும் கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 18 முதல் 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
- ஓட்டுநர் - ரூ.19,500 முதல் ரூ.62000 மாதம்
- அலுவலக உதவியாளர் - ரூ.15,700 முதல் ரூ.50,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு :
அலுவலக உதவியாளர் : இங்கே கிளிக் செய்யவும்.
ஓட்டுநர் : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை:
சென்னை தேசிய மாணவர் படை அலுவலக பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 05.11.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 05.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cms.tn.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












