தமிழக அரசிற்கு உட்பட்டு சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1200க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடத்தினை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10,12-வது தேர்ச்சி பெற்று செவிலியர் துறை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெறவுள்ள இப்பணியிடத்திற்கான தேர்வில் பங்கேற்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : செவிலியர்
மொத்த காலிப் பணியிடம் : 1234
கல்வித் தகுதி : 10, 12-வது தேர்ச்சி பெற்று Auxiliary Nurse Midwifery in Nursing (ANM)படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 57 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.mrb.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : கல்வித் தகுதியின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 600
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 300
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.mrb.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












