8-வது படித்தவரும் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கலாம்..! வாய்ப்பளிக்கும் தமிழக அரசு!

மாநில மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.

மாநில மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், தற்போது காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் இதர விபரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

8-வது படித்தவரும் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கலாம்..! வாய்ப்பளிக்கும் தமிழக அரசு!

மொத்த காலிப் பணியிடங்கள் : 03

பணி : அலுவலக உதவியாளர், தட்டெழுத்தாளர்

அலுவலக உதவியாளர் : 2

கல்வித் தகுதி : 8-வது முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 35 வயது வரை

கூடுதல் திறன் : மிதி வண்டி ஓட்டத்தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை.

தட்டெழுத்தாளர் : 1 பணியிடம்

கல்வித் தகுதி : 10-வது முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 35 வயது வரை

கூடுதல் திறன் :

  • தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை தட்டச்சு
  • அல்லது தமிழில் உயர்நிலை, ஆங்கிலத்தில் இளநிலை,
  • அல்லது ஆங்கிலத்தில் உயர்நிலை, தமிழில் இளநிலை.

சம்பளம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.10.2018

தேர்வு முறை : தகுதிக்கு ஏற்ப குறுகிய பட்டியல் தேர்வு செய்யப்பட்டு திறன் சோதனையின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :-

தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தினை அடிப்படையாகக் கொண்டு தங்களுடைய சுய விபரத்தினை பூர்த்தி செய்து 2018 அக்டோபர் 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :-

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் செயலாளர், மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு, எண்.143, பி.எஸ். குமாராசாமி ராஜா சாலை, (கிரீன் வேஸ் சாலை) சென்னை-28 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

மேலும் விபரங்களை அறியவும், மாதிரி விண்ணப்பத்தினை பெறவும் http://www.shrc.tn.gov.in./ அல்லது http://www.shrc.tn.gov.in./files/Typist_OA_advt_170918.pdf ஆகிய அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Human Rights Recruitment 2018 – Apply Online 03 Office Assistant, Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+