தமிழ்நாடு மருத்துவத் துறையின் கீழ் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகத்தில் காலியாக உள்ள Therapeutic Assistants பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 135 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு நர்சிங் துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் (Indian Medicine and Homoeopathy)
மேலாண்மை : தமிழ்நாடு மருத்துவத் துறை
பணி : Therapeutic Assistants
மொத்த காலிப் பணியிடம் : 135
- ஆண்கள் - 53 காலியிடங்கள்
- பெண்கள் - 82 காலியிடங்கள்
கல்வித்தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Diploma in Nursing Therapy துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 1.7.2021 தேதியின்படி 18 முதல் 57 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : இப்பணியிடங்களுக்கு ஒரு வருகைக்கு ரூ.375 வரை ஊதியம் வழங்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து 25.08.2021 தேதிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://tnhealth.tn.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.