1,500 இடைநிலை ஆசிரியர் நியமன அறிவிப்பு செம குஷியில் ஆசிரியர்கள்...!!

தமிழக தொடக்க கல்வி துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 1,500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நியமனம் செய்வதற்கா அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் செம குஷியில் ஆசிரியர்கள் உள்ளனர்.

தமிழக தொடக்க கல்வி துறையின்கீழ் 31,214 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 35 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே, கரோனா பரவலுக்கு பிறகு, அரசுப் பள்ளிகளில் சுமார் 5 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். அதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மட்டும் 2.8 லட்சம் பேர் கூடுதலாக சேர்க்கை பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதனிடையே, 2013-14-ம் கல்வி ஆண்டுக்கு பிறகு, தமிழக அரசால் இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், தற்போது தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மட்டும் 8,643 இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை சமாளிக்க தொகுப்பு ஊதியத்தில் பட்டதாரிகள் நியமனம் செய்யப்பட்டு, மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1,500 இடைநிலை ஆசிரியர் நியமன அறிவிப்பு செம குஷியில் ஆசிரியர்கள்...!!

அதை ஏற்று, தற்போது 1,500 இடைநிலை ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் நியமனம் செய்து கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில்

றப்பட்டுள்ளதாவது:

தற்போது 1,500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப அனுமதி அளிக்கப்படுகிறது.

அதற்கு முன்பாக, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட உபரியாக இருக்கும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை, அதிககாலி இடங்கள் உள்ள மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு நிரவல் செய்யவேண்டும்.

5 ஆண்டு பணிபுரியுமாறு நிபந்தனை

தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 1,500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவோரை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக உள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். அவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அந்த மாவட்டங்களில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையை நியமன ஆணையில் குறிப்பிட்டு நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் உள்ளதால், திருவண்ணாமலை, தர்மபுரி போன்ற வடமாவட்டங்களை முன்னுரிமை மாவட்டங்களாக மாநில அரசு முன்பு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
1,500 ஆசிரியர் பணியிடங்களை அரசு நிரப்பவுள்ளதால் ஆசிரியர்கள் செம குஷியில் உள்ளனர். நல்ல ஊதியம், பணிப் பாதுகாப்பு, பணியில் தன்னிறைவு போன்ற காரணங்களால் ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் திளைப்பதாக தெரியவந்துள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu school education department has given approval to recruit 1,500 secondary grade teachers for government primary and middle schools through the Teachers Recruitment Board (TRB). The recruitment of secondary grade teachers will be carried out after a gap of 10years. Elementary education director has sought permission from the government to recruit 500 more secondary grade teachers in addition to 1,000 teachers approved by the government.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+