13 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு! ரூ.10 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தமளித்த முதலமைச்சர்!

10 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 13 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 
13 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு! ரூ.10 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தமளித்த முதலமைச்சர்!

சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில் துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, விழுப்புரம், மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 8 தொழில் நிறுவனங்களுடன் 10,399 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சர் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

காஞ்சிபுரத்தில் ரூ.5,423

காஞ்சிபுரத்தில் ரூ.5,423

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரகடத்தில் விக்ரம் சோலார் நிறுவனம் ரூ.5,423 முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 7500-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பப்பட உள்ளது.

ரூ.250 கோடியில் தொழிற்பூங்கா

ரூ.250 கோடியில் தொழிற்பூங்கா

அதே போன்று, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் ரூ.250 கோடி மதிப்பில் தொழிற்பூங்கா திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதில், சுமார் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

கோவைக்கு 200 கோடி ரூபாய்

கோவைக்கு 200 கோடி ரூபாய்

கோவையில் ரூ.200 கோடி மதிப்பில் Aquasub நிறுவனத்தின் Ductile Iron Foundry திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 400 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

கோவைக்கு மேலும் ரூ.250 கோடி ஒப்பந்தம்
 

கோவைக்கு மேலும் ரூ.250 கோடி ஒப்பந்தம்

அதேப் போன்று, கோவை மாவட்டத்தில் ரூ.250 கோடி முதலீட்டில், ELGI Equipments நிறுவனத்தின் Air Compressor உற்பத்தி திட்டத்துடன் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதில், சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

125 ஏக்கரில் தொழிற்பூங்கா

125 ஏக்கரில் தொழிற்பூங்கா

ராணிப்பேட்டையில் ரூ.200 கோடி முதலீட்டில் என்டிஆர் இன்ஃபார்டக்சர் நிறுவனத்தின் சார்பில் 125 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா திட்டத்திற்கான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் முன்னிலையில் பல கோடி ஒப்பந்தம்

முதலமைச்சர் முன்னிலையில் பல கோடி ஒப்பந்தம்

மேலும் இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்டத்தில் ரூ.40 கோடி முதலீட்டிலும், விழுப்புரத்தில் ரூ.36 கோடி முதலீட்டிலும், மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.4,000 கோடி ரூபாய் முதலீட்டிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் சுமார் 3000 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN govt signs 8 new MoUs, employment opportunity for 13,000 persons
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X