தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)
மொத்த காலியிடங்கள் : 20
பணி : மாவட்ட கல்வி அதிகாரி
கல்வித் தகுதி : கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், புவியியல், விலங்கியல், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு, தமிழ், ஆங்கிலம் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.56,900 முதல் ரூ.1,80,500 வரையில்
வயது வரம்பு : 58 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : www.tnpsc.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம் : பதிவுக் கட்டணம் ரூ.150, முதல்நிலைத் தேர்வு கட்டணம் ரூ.100, முதன்மைத் தேர்வு கட்டணம் ரூ.200
கட்டணம் செலுத்த கடைசி நாள் : 2019 ஜனவரி 11
முதல்நிலைத் தேர்வு மையங்கள் : சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், விழுப்புரம், வேலூர்.
முதன்மைத் தேர்வு : சென்னையில் மட்டும் நடைபெறும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 2019 ஜனவரி 09
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி : 2019 மார்ச் 02
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnpsc.gov.in/notifications/2018_37_notyfn_DEO.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












