கிராம உதவியாளர் பணி: கிராமத்தை பற்றி கட்டுரை எழுத தெரிந்தால் உதவியாளர் பணி...!

2,748 கிராம உதவியாளர் பணி நியமனம்

மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு, அந்தந்த வருவாய் கிராமத்துக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் ரூ.11,100 முதல் அதிகபட்சம் ரூ.35,100 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

நிர்வாகம் : வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை(Revenue Administration and Disaster Management)

மேலாண்மை : மாநில அரசு

காலிப்பணியிடம் எண்ணிக்கை: 2,748

பணி விவரம் :

கிராம உதவியாளர்

விண்ணப்பிக்கும் முறை : ஆஃப்லைன்

100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுதினால் பணி...!

கல்வி தகுதி

தமிழ் மொழியில் எழுத, படிக்க கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட வருவாய் கிராமத்தையோ அல்லது அதை சுற்றியுள்ள குக்கிராமத்தையே சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு செய்திருப்பது கூடுதல் தகுதியாக கருதவும், கட்டாயம் என்றும், அந்தந்த வருவாய் மாவட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்படலாம்.

வயது வரம்பு

குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்; பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினர் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 37 வயதுக்கு மிகாமலும், மாற்றுத் திறனாளிகள் 42 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பு 48 என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்

ரூ.11,100 - ரூ.35,100/-

தெரிவு முறை/ நிபந்தனைகள்

வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்

மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும், கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி நிலவரப்படி, காலியாக இருக்கும் கிராம உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை பற்றிய தகவலை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க, மாவட்ட ஆட்சியர்கள், காலிப் பணியிடங்கள் குறித்த தகவலை அளித்துள்ளனர்.

இதன் அடிப்படையில், மாநிலம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் காலியிடங்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

உத்தேச தேதிகள் அறிவிப்பு...!

இந்த காலிப் பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, எந்தவித விதி மீறலும் இல்லாமல் கிராம உதவியாளர் காலியிடங்களை நிரப்ப வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 7ஆம் தேதி வரை பெற வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்களை நவம்பர் 14ஆம் தேதி பரிசீலித்து, முறையான நேர்காணல் நடத்தி, டிசம்பர் 19ஆம் தேதிக்குள் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும். தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியலை, டிசம்பர் 19ஆம் தேதி வெளியிட்டு, அன்றே பணி ஆணைகளை வழங்க வேண்டும்.

100 வார்த்தைக்கு மிகாமல்

இதற்கான எழுத்துத் திறன் தேர்வைக் கண்காணிக்க, தாலுகா அளவில் துணை மாவட்ட ஆட்சியரை, கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும்.

கிராமத்தைப் பற்றிய விவரங்கள், நில வகைப்பாடுகள், கிராம கணக்குகள் அல்லது மாவட்ட ஆட்சியர் கூறும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம்.

வாசிப்புத் திறனை அறிந்து கொள்வதற்காக, ஏதாவது ஒரு புத்தகத்திலும் இருந்து சில வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம்.

அதற்கான விதிகள், வழிகாட்டுதல்களை வட்டாட்சியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கையாக வழங்க வேண்டும் என, அந்த அறிக்கையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு நியமனம் சார்ந்த விவரங்கள் விரிவாக வழங்கப்பட்டுள்ளன.

வில்லேஜ் அசிஸ்டன்ட் ரோல் என்ன?

தமிழகத்தில் வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கீழ், கிராம உதவியாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.

வரி வசூலித்தல், கிராம கணக்குகளை நிர்வகித்தல், நில வருவாய் ஆவணங்களை தயாரித்தல், கணக்குகளை முறையாக சரியாக வைத்து கொள்ளுதல், பிறப்பு, இறப்பு போன்ற பல்வேறு பதிவேடுகளை தயாரித்தல் மற்றும் புதிப்பித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்பவரே கிராம நிர்வாக உதவியாளர் ஆவார். அதாவது, கிராம் நிர்வாக அலுவலருக்கு உதவியாளர் போல் செயல்பட வேண்டும்.

உள்ளூரில் ரூ.35 ஆயிரத்தில் பணி என்றால் காலரை தூக்கிவிட்டுட்டு நடக்கலாம் யூத்ஸ்...! ஊரை விட்டு வெளியே வேலை தேட விரும்பாதவர்கள் இப்பவே ஸ்டார்ட் பண்ணுங்க உங்களுக்கான வாய்ப்பை எட்டி பிடிக்கும் முயற்சியை... ஆல் தி பெஸ்ட்...!

காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு தொடர்பாக, அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியாகும் அறிவிப்புகளை தவறாமல் படித்து, உங்களுக்கான உரிய வாய்ப்பை தட்டி செல்லுங்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Village Assistant Jobs 2022: The Tamil Nadu government has sent a circular to all District Collectors to fill up 2,748 vacant Village Assistant posts across Tamil Nadu.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X