ரூ.50 ஆயிரம் மாத சம்பளத்தில் தமிழக அரசு வேலை தயார்....!!

ரூ.50 ஆயிரம் மாத சம்பளத்தில் தமிழக அரசின் விருதுநகர் மாவட்டத்தில் இரவுக் காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், திறமையும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2023/11/2023112923.pdf என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்து அறியலாம்.

தமிழ்நாட்டிலுள்ள, விருதுநகர் மாவட்டம் (Virudhunagar), விருதுநகர் வட்டம் மற்றும் விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வுநிலை நகராட்சியும் ஆகும். விருதுநகரின் பழைய பெயர் விருதுப்பட்டி ஆகும்.

இங்கு உணவுப் பொருட்கள் வியாபாரமும், மலைத்தோட்ட விளைப்பொருட்கள் வியாபாரமும் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன.

 ரூ.50 ஆயிரம் மாத சம்பளத்தில் தமிழக அரசு வேலை தயார்....!!

உயர்ந்த ரக கருங்கண்ணிப் பருத்தி பல ஊர் ஆலைகளுக்கும் இங்கிருந்துதான் ஏற்றுமதியாகிறது. நல்லெண்ணெய், மிளகாய் வற்றல் முதலியனவும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. இங்கிருந்து ரயில்கள் மூலம் வெளியிடங்களுக்கு ஏராளமான சரக்குகள் அனுப்பப்படுவதால், இங்குள்ள விருது நகர் ரயில் நிலையத்தில் மிக நீளமான நடைமேடையும் சரக்கு ஏற்ற வசதியாக தனி வசதியுடன் கூடிய பகுதியும் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வூரின் சூலக்கரை பகுதியில் அரசு தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. இந்நகரில் தான் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான காமராஜர் பிறந்தார். விருதுநகர் கவுசிக நதியின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது.

இங்குள்ளவர்கள் சொல்லும் கூற்றின்படி, பல ராஜ்ஜியங்களை கைப்பற்றி, பல விருதுகளை பெற்ற ஒரு போர்வீரன், இந்த ஊருக்கு வந்து குடியிருப்பாளர்களுக்கு சவால் விடுத்தார். ஒரு குடியிருப்பாளர் அவன் சவாலை ஏற்றுக்கொண்டு, அந்த வீரனோடு போரிட்டு, அவனை கொன்று, அவன் வைத்திருந்த விருதுகளை கைப்பற்றினார். இவ்வாறு அவன் பெற்ற விருதுகள் யாவும், விருதுநகரை சார்ந்த வீரரால் வெற்றி பெற்றமையால், இதனை "விருதுகள் வெட்டி" என்று கூறப்பட்டது. பின்னர் 1875 இல் விருதுப்பட்டி என மாறியது. பின்னர் மருவி விருது நகர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்புவாய்ந்த விருது நகர் மாவட்டத்தில்தான், தற்போது இரவுக் காவலர் (Night Watchman) பிரிவில் ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இந்தக் காலியிடத்தை பூர்த்தி செய்வதற்காக விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகம் (TNRD) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் இரவுக் காவலர் (Night Watchman) பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இரவுக் காவலர் பணியிடத்துக்கு வயதுத்தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்புகொண்டு அறியலாம்.

இரவுக் காவலர் பணியிடத்துக்கு சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக வழங்கபப்ட்ட உள்ளது.

இரவுக் காவலர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 19.12.2023 அன்றுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு

https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2023/11/2023112923.pdf என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNRD Virudhunagar invites applications for recruitment of Night Watchman Posts. The applicants are requested to Download Application Form through Official Website https://Virudhunagar.nic.in/. The last date for the receipt of application along with enclosures is 19.12.2023.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+