தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனக் காவலர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழக வனத் துறையில் காலியாக உள்ள 564 வனக் காவலர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புவோர் www.forests.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு ஆகஸ்ட் 10-ஆம் தேதி கடைசி நாளாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
For Quick Alerts
For Daily Alerts