தமிழக அரசிற்கு உட்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 32 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் வரும் ஜனவரி 8ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மாவட்ட நீதிமன்றம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : மாவட்ட நீதிபதி (Entry Level)
மொத்த காலிப் பணியிடங்கள் : 32
கல்வித் தகுதி : சட்டத் துறையில் இளங்கலை பட்டம் பெற்று தமிழ்நாடு பார்கவுன்சிலில் பதிவு செய்திருப்பதுடன் குறைந்தது 7 ஆண்டுகள் வழக்குரைஞராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 35 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : மாதம் ரூ.51,500 முதல் ரூ.63,070 வரையில்
தேர்வு முறை : முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.2000. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை : கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 08.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications












