சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ்., வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் பொருள் இயல் மற்றும் புள்ளியியல் துறையில், காலியாக உள்ள அலுவலக உதவியாளர், தூய்மை பணியாளர், இரவு நேரக் காவலர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது.
நிரந்தர வேலையான இந்த பணியிடங்களுக்கு, குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதை மறக்காதீங்க...! வயது வரம்பு உள்ளிட்ட இன்ன பிற விவரங்களை கீழே பார்க்கலாம்.
தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பிழையின்றி பூர்த்தி செய்து நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
நிர்வாகம் : பொருள் இயல் மற்றும் புள்ளியியல் துறை (தமிழ்நாடு அரசு)
மேலாண்மை : மாநில அரசு

பதவிகள் விவரம்
v நிரந்தர முழு நேரக் காவலர்
v தூய்மைப் பணியாளர்
v அலுவலக உதவியாளர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 9
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 05.12.2023
சம்பளம்: மாதம் ரூ.15,700 - ரூ.58,100
வயது வரம்பு
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு 18 முதல் 32 என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.பி.சி., எம்.பி.சி., ஆகிய பிரிவினருக்கான வயது வரம்பு 18 முதல் 34 ஆகவும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான வயது வரம்பு 18 முதல் 37 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டு உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வி தகுதி
Ø வாட்ச்மேன் பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்கள் சென்னையில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
Ø தூய்மைப் பணியாளர் பணிக்கும் இதே கல்வி தகுதிதான் கோரப்பட்டுள்ளது.
Ø அலுவலக உதவியாளர் பணிக்கு, 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சென்னையில் வசிப்பவராக இருத்தல் அவசியமாகும்.
விண்ணப்ப கட்டணம்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
காலிப் பணியிடங்களுக்கு வந்து சேரும் விண்ணப்பங்களில் தகுதியானவை பரிசீலிக்கப்பட்டு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி அனுப்ப வேண்டும்.
தேவையான விவரங்களை தவறாமல் பூர்த்தி செய்வது அவசியம்.
விண்ணப்ப படிவங்களை டவுன்லோடு செய்ய....!
ப்ளீஸ் நோட் இட்...!
ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்கும் போது, ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப படிவத்துடன் ஆதார் கார்டு, இருப்பிட முகவரி, வயது, கல்வி தகுதி ஆகிய சான்றுகளின் நகலை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப, 05.12.2023 கடைசி நாளாகும். அதன்பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடும் முகவரிக்கு நேர்முகத்தேர்வு பற்றிய விவரங்கள் தபால் மூலம் தெரிவிக்கப்படும்.
ஒரு முறை கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!
விண்ணப்பதாரர்கள் https://des.tn.gov.in/index.php/ta என்ற இணையதளத்தில் இருந்து மட்டுமே விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய முடியும்.
பணி பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டுமா?
https://des.tn.gov.in/index.php/en
https://des.tn.gov.in/sites/default/files/2023-11/OA_NEW.pdf


Click it and Unblock the Notifications












