கூட்டுறவு நூற்பாலையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், எலக்ட்ரிக்கல் பொறியாளர், தொழிலாளர் நல அதிகாரி, அலுவலக மற்றும் எலக்ட்ரிக்கல் மேற்பார்வையாளர் உள்ளிட்டு 25 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கூட்டுறவு நூற்பாலை
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 25
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
- இளநிலை உதவியாளர்
- எலக்ட்ரிக்கல் பொறியாளர்
- தொழிலாளர் நல அதிகாரி
- அலுவலக மற்றும் எலக்ட்ரிக்கல் மேற்பார்வையாளர்
பணியிடம் : தூத்துக்குடி, தேனீ, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை
கல்வித் தகுதி : பொறியியல் துறை பட்டதாரிகள், கலை அறிவியல் துறை பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு 21 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை : வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள அந்தந்த கூட்டுறவு நூற்பாலையில் அலுவலக வேலை நேரத்தில் சென்று விண்ணப்பப் படிவத்தினைப் பெற்றுக்கொண்டு, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 31.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


Click it and Unblock the Notifications












