ரூ.50 ஆயிரத்தில் கோ ஆப்டெக்சில் பணி
'கோ-ஆப்டெக்ஸ்' என்று அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் நிறுவனம் என்பது ஒரு வணிக நிறுவனமாகும்.
தமிழ்நாட்டில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் ஏழை நெசவாளர்கள் தயாரிக்கும் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரம் உயரவும், அவர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர் வேலை வாய்ப்பினை உருவாக்கவும் ஏற்படுத்தப்பட்ட தமிழக அரசின் சார்பு நிறுவனம் ஆகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நிறுவனத்தில், 11 சந்தைப்படுத்தல் மேலாளர் காலிப்பணியிடங்களுக்கு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் செப்.,28 காலை 11 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம் : தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்
லிமிடெட் (கோ-ஆப்டெக்ஸ்)
மேலாண்மை : மாநில அரசு
பணி விவரம்
சந்தைப்படுத்தல் மேலாளர்(Marketing Manager)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை - 11
கல்வி தகுதி
சந்தைப்படுத்துதல் பாட நெறியில் எம்.பி.ஏ., முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆடை தொழிலில், குறைந்தது ஐந்து ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருத்தல் கட்டாயம்.
வயது வரம்பு
விண்ணப்பிக்க விரும்புவோர் 15.9.2022 அன்று வயது 33க்கு கீழ் இருக்க வேண்டும்.
சம்பளம்
மாத ஊதியமாக, ரூ.50 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் விதிகள் படி, பயணப்படி, அகவிலைப்படி ஆகியவையும் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை
நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்படுவர்.
எங்கெங்கு பணி
நேர்காணலில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள்,
சென்னை, கடலூர், கோயம்புத்தூர், மதுரை, செலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர், பெங்களூரூ, மும்பை, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களில் உள்ள சந்தை நிலையங்களில் பணியமர்த்தப்படுவர்.
நேர்காணல் நடைபெறும் நாள்: 28.09.2022
மறக்காதீங்க... நாளை காலை 11 மணிக்கு நேர்காணல்.
நேர்காணல் நடைபெறும் இடம்
Co-optex Head Office,
No.350, Pantheon Road,
Egmore, Chennai - 600 008.


Click it and Unblock the Notifications












