குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்கள் சட்டம், 2005, பிரிவு 17(1)ன்படி மாநிலத்தில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு தலைவர் மற்றும் ஆறு உறுப்பினர்கள் பதவிக்கான நியமனம் செய்ய வேண்டி ஆணையத்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்(Tamilnadu Commission for protection of child rights)
மேலாண்மை : மாநில அரசு
பதவிகள் விவரம்
தலைவர்
உறுப்பினர்கள்
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 14.10.2022
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பபடிவங்கள் மற்றும் தேவையான தகுதி விவரங்கள் www.tn.gov.in/department/30 (Social Welfare and Women Empower Department) மற்றும் www.tncpcr.tn.gov.in (Tamil Nadu Commission for Protection of Child Rights) என்ற இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்U+002e
தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிகளுக்கு, அதற்கான அமைந்த படிவத்தில் புகைப்படத்துடன் (PassPort Size) 14.10.2022 அன்று மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
செயலர்,
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், எண்.183/1, ஈ.வே.ரா.பெரியார் சாலை,
பூந்தமல்லி நெடுஞ்சாலை,
கீழ்பாக்கம்,
சென்னை -10 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
நோட் இட் ப்ளீஸ்...!
முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேராத விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.
தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.
பிளாஸ் பேக்...!
தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக இருந்த சரஸ்வதி என்பவரையும், உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார், துரைராஜ், முரளிகுமார் ஆகியோரையும் நீக்கி, 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில், தமிழக அரசு உத்தரவிட்டது.
புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்க, ஆணையத்தின் செயலாளருக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த,சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, மாநில அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு,தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், மீண்டும் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!
மாதிரி விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டுமா?
http://www.tncpcr.tn.gov.in/docs/tncpcr chair person post filling.pdf


Click it and Unblock the Notifications












