அண்ணா பல்கலையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகலைக்கழகம், அறிவுசார் சொத்து பகுப்பாய்வாளர் (Intellectual Property Analyst) பணியை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதி, ஆர்வமுள்ளவர்கள் டிச.,16க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நிர்வாகம்: அண்ணா பல்கலைக்கழகம்(Anna University)
மேலாண்மை: மாநில அரசு

பதவிகள் விவரம்
· அறிவுசார் சொத்து பகுப்பாய்வாளர்(Intellectual Property Analyst)
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 16.12.2022
பணியிடங்கள் எண்ணிக்கை: 1
கல்வி தகுதி / வயது வரம்பு
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் Bachelors degree in Engineering/Technology or Masters Degree in Science இல் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
வயது வரம்பு மற்றும் சலுகைகள் குறித்த விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு முறை
காலிப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஊதியம்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, ரூ.35,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
முன் அனுபவம்
விண்ணப்பதாரர்கள் அறிவுசார் சொத்துரிமை சார்ந்த துறையில், குறைந்தப்பட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, கோரப்பட்ட அனைத்து சான்றிதழ்களுடன் பிழையின்றி பூர்த்தி செய்து, கீழே கொடுக்கப்பட்ட அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்கள் 16.12.2022 தேதிக்குள் வந்து சேரும் வண்ணம் அனுப்பி வைக்க வேண்டும். அதன்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
முகவரி
The Director,
Centre for Intellectual Property Rights (CIPR),
CPDE building,
Anna University,
Chennai 600 025
ப்ளீஸ் நோட் இட்...!
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.12.2022
https://www.annauniv.edu/events.php என்ற வலைதள பக்கத்தில், பணி சார்ந்த முழு விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
வயது, கல்வித் தகுதி, பிரிவு போன்றவற்றில் உரிமை கோருபவர்கள், அதற்குரிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும். அதுசார்ந்த முழு விவரங்கள்
chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.annauniv.edu/pdf/Advertisement-IP Analyst Recruitment 2022.pdf