தமிழக அரசிற்கு உட்பட்ட திருவள்ளூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 02 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 5-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.35 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : திருவள்ளூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : Village Assistant
மொத்த காலிப் பணியிடங்கள் : 02
கல்வித் தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 01.01.2022 தேதியின்படி 21 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.11,100 முதல் அதிகபட்சம் ரூ.35,100 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்களை இணைத்து தொடர்புடைய வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் அலுவலர் அவர்களுக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.01.2022 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் tiruvallur.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












