தமிழக அரசிற்கு உட்பட்டு திருவள்ளூரில் செயல்பட்டு வரும் வருவாய்த் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 08 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு 5-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : வருவாய்த் துறை, திருவள்ளூர்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 08
பணி : கிராம உதவியாளர்
கல்வித் தகுதி :
5-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 01.01.2022 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள்
விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளை இணைத்து அனுப்ப வேண்டும்.
மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
ஊதியம் : ரூ.11,100 முதல் ரூ.35,100 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் tiruvallur.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து அதிகாரப் பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 20.01.2022 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.01.2022 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் tiruvallur.nic.in அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணைப்பைக் காணவும்.


Click it and Unblock the Notifications












