திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்த எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்பட்டு, விண்ணப்பிப்பதற்கான தேதியும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 3ம் தேதியன்று வெளியானது. அதன்படி, மொத்தம் 30 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதற்கு மார்ச் 2 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கக் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது திருவள்ளூர் கூட்டுறவு ஆள்சேர்ப்பு நிலையத்திலிருந்து திருத்த அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் உத்தேசமாக காலியாக உள்ள 36 உதவியாளர் / எழுத்தர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு 5.4.2020 அன்று முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருவள்ளூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படவுள்ளது.
இத்தேர்வுக்கு தகுதி பெற்ற ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் www.tvldrb.in என்ற இணையதளம் வழியாக (Through Online Only) மட்டுமே 9.3.2020 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
இத்தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி, கூட்டுறவுப் பயிற்சி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு மற்றும் இன சுழரற்சி, தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வுக்கட்டணம், தேர்வு நடைபெறும் நாள் மற்றும் பிற விவரங்களுக்குத் திருவள்ளூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் www.tvldrb.in வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிவிக்கையைக் காணவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இப்பணியிடங்களுக்கு ஏற்கனவே 26.8.2019 முதல் 30.9.2019 வரை திருவள்ளூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்திற்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தவர்கள், மீண்டும் விண்ணப்பித்தால் மட்டுமே அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
பழைய விண்ணப்பம் எக்காரணம் கொண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது எனவும், இவர்கள் மீண்டும் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் விண்ணப்பிக்கக் கட்டண இரசீது எண்னை மீண்டும் ஒருமுறை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்'
என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












