திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவுத் துறையில் வேலை வாய்ப்பு!

திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவுச் சங்க நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்க நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 30 பணியிடங்கள் உள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவுத் துறையில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கம்

மொத்த காலிப் பணியிடம் : 30

காலிப் பணியிட விபரங்கள்:

  • பொது - 9,
  • பிற்படுத்தப்பட்டோர் - 8,
  • பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) - 1,
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர் மரபினர் - 6,
  • ஆதிதிராவிடர் - 5,
  • ஆதிதிராவிடர் (அருந்ததியர்) - 1

கல்வித் தகுதி :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பும், கூட்டுறவு பயிற்சியும் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். முன்னாள் ராணுவத்தினர் 48 வயதுக்கு உட்பட்டவராகவும், மாற்றுத்திறனாளிகள் 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் இவ்வகுப்புகளைச் சார்ந்த முன்னாள் இராணுவத்தினர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், அனைத்து இனத்தைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு வயது வரம்பு இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண இங்கே கிளிக் கிளிக் செய்யவும்.

முக்கிய நாட்கள்:

  • அறிவிப்பு வெளியான நாள் : 3 பிப்ரவரி 2020
  • விண்ணப்பம் தொடங்கிய நாள் : 3 பிப்ரவரி 2020
  • விண்ணப்பம் முடியும் நாள் : 2 மார்ச் 2020
  • தேர்வு நடைபெறும் நாள் : 5 ஏப்ரல் 2020

மேற்கண்ட பணியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tvldrb.in என்னும் இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, அதனை பூர்த்தி செய்து மார்ச் 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.250 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

ஏற்கனவே, கடந்த 26.8.2019 முதல் 30.9.2019 வரையில் திருவள்ளூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து விண்ணப்பக் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆனால், விண்ணப்பிக்கக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அதற்கு பதிலாக ஏற்கனவே செலுத்திய விண்ணப்பக்கட்டண இரசீது எண்ணை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tiruvallur District Cooperative Bank Recruitment 2020
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+