திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் காலியாகவுள்ள இரவுக் காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் டிசம்பர் 13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இங்கு 2 காவலர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. பணிக்குத் தேர்வு செய்யப்படும் நபர்கள் திருப்பூர் உபகோட்டம் அலுவலகம், திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகங்களில் பணியில் அமர்த்தப்படுவர்.
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஊதியமாக மாதம்தோறும் ரூ. 15,700/- (15,700 - 50,000) வழங்கப்படும். கல்வித் தகுதியாக தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். கூடுதலாக மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: பட்டியலின மக்கள், பட்டியலின அருந்ததியர், பட்டியல் பழங்குடியினர் 18 முதல் 37 வயது வரையும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிறப்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர் 34 வயது வரையும், பொது பிரிவினர் 32 வயது வரையும் இருக்கலாம்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை tiruppur.nic.in என்ற இணையதளத்திலும் தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய இணையதளத்திலும் (National career service portal - www.ncs.gov.in) பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 29.11.2023 முதல் 13/12/2023 நாட்களில் காலை 10.00 மணி முதல் 5.45 மணி வரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப்பிரிவு) அலுவலகத்துக்கு நேரில் தரலாம். பதிவு அஞ்சல் மூலமாகவும் அனுப்பப்பட வேண்டும்.
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத (கல்வி, வயது, இனச்சுழற்சி) விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விதிகளின்படி மேற்குறிப்பிட்ட இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் இம்மாதம் 13-ம் தேதி (டிசம்பர் 13,2023) ஆகும். கூடுதல் விவரங்களுக்கு tiruppur.nic.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












