திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் சில குறிப்பிட்ட பணிக்கு எழுதப் படிக்கத் தெரிந்தாலே ரூ.50 ஆயிரம் வரையிலும் ஊதியம் வழங்கப்பட உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பணியிடம் : திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 109
பணி மற்றும் பணியிட விபரம் :-
- சுகாதார பணியாளர் : 03
- துப்புரவாளர் : 03
- மசால்ஜி மற்றும் இரவு காவலர் : 14
- அலுவலக உதவியாளர் : 32
- ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் : 02
- ஜூனியர் பாலிஃப் : 37
- முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் : 06
- நகல் வாசிப்பவர் : 07
- கணினி இயக்குபவர் : 05
கல்வித் தகுதி:-
சுகாதார பணியாளர், துப்புரவாளர், மசால்ஜி மற்றும் இரவு காவலர் : விண்ணப்பதாரர்களுக்கு எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் : 8-வது தேர்ச்சி
ஜெராக்ஸ் ஆப்ரேட்டர், ஜூனியர் பாலிஃப், முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர், நகல் வாசிப்பவர் : 10-வது தேர்ச்சி
கணினி இயக்குபவர் : கணினித் துறையில் பி.எஸ்சி, பி.காம் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : வயது வரம்பு 18 முதல் 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்:-
சுகாதார பணியாளர், துப்புரவாளர், மசால்ஜி மற்றும் இரவு காவலர், அலுவலக உதவியாளர் : ரூ. 15,700 முதல் ரூ.50,000 வரை
ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் : ரூ. 16,600 முதல் ரூ.52,400 வரை
ஜூனியர் பாலிஃப் : ரூ. 19,500 முதல் ரூ.62,000 வரை
முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் : ரூ. 19,500 முதல் ரூ.62,000 வரை
நகல் வாசிப்பவர் : ரூ. 19,500 முதல் ரூ. 62,000 வரை
கணினி இயக்குபவர் : ரூ. 20,600 முதல் ரூ.65,500 வரை
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://districts.ecourts.gov.in/tn/tirunelveli என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி : முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருநெல்வேலி.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 31
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://districts.ecourts.gov.in/tn/tirunelveli அல்லது https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment%20Notification%20_2018%20Tirunelveli_0.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












