ஐஏஸ் தேர்வுகளை வெல்ல கடைபிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகள்

Posted By:

ஐஏஎஸ் லட்சியம் போட்டி தேர்வினை வெறித்தனாமாக நாடு முழுவதும் படிக்க தொடங்கிவிட்டனர் தேர்வர்கள். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் என தாரக மந்திரங்களை தங்கள் தங்கியிருக்கும் சுவறு முதல் சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் சுவரொட்டியில் எழுதி ஒட்டி படிக்கும் தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெற முனைப்புடன் உள்ளனர்.

ஐஏஎஸ் பிரிலிம்ஸ் தேர்வினை வெல்ல சில அணுகுமுறைகளை கையாள வேண்டும். அதனை நீங்கள் முறையாக கையாளுமொழுது வெற்று பெறலாம்.

வினா வங்கி:

ஐஏஎஸ் தேர்வினை வெற்றி பெற பிரிலிம்ஸ் பற்றிய ஒரு ஐடியா கிடைக்க புதிதாக படிப்பவர்களாக இருந்தாலும் , இரண்டாம் மற்றும் மூன்றாம் முறை எழுதுபவர்களாக் இருந்தாலும் தினமும் 30 முதல் 50 கேள்விகள் கடந்த ஆண்டுகள் கேட்கப்பட்டுள்ளன வினாவங்கியினை தினமும் பயிற்சி செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து படித்தலுடன் ரிவைஸ் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் வெற்றி பெறமுடியும்.

டெஸ் பேட்ச்:

ஐஏஎஸ்தேர்வினை நீங்கள் தொடர்ந்து படித்தால் மட்டும் போதாது நீங்கள் எந்த அளவிற்கு படித்துள்ளிர்கள் என்பதை பரிசோதிக்க ஆனலைன் டெஸ் பேட்ச், சுயமாக பரிசோதிதல், பயிற்சி நிறுவனங்களில் நடத்தப்படும் டெஸ்ட் பேட்சுகளை இடைவிடாது பங்கேற்க வேண்டும்.

டெஸ்ட் பேட்சுகளில் பங்கேற்கும் மொழுது கேட்கப்படும் கேள்விகள் குழப்பமாக இருத்தல் மற்றும் மதிபெண்களை பற்றி கவலைப்படாமல் டெஸ்ட் பேட்சினை முழுவதுமாக பங்கேற்று தேர்வினை எழுதவும். டெஸ்ட் பேச்சில் கொடுக்கப்படும் டிஸ்கஸன் என்ற பகுதி மிகமுக்கியமானது ஆகும். அதனை குறிப்பு எடுத்து கொண்டு படிக்கவும். தொடர்ந்துடெஸ்ட் பேட்சில் கேட்கப்படும் கேள்விளையும் அதர்கான விடை மற்றும் அதுசார்ந்த பாடங்களை மீண்டும் ரிவைஸ் செய்து கொண்டு படியுங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

 

நிறையபடிப்பதை விட படிப்பதை தெளிவாக படிக்க வேண்டும்:

ஐஏஎஸ் தேர்வில் அனைத்து பகுதிகளையும் படிக்க வேண்டும் அதேபோல் அதிகம் படித்தலை விட ஆழமாக படிக்க வேண்டும். நீங்கள் எந்த அளவிற்கு சரியாகப் படிக்கின்றிர்களோ அந்த அளவிற்கு உங்கள் வெற்றி நிச்சயம் கிடைக்கின்றது. போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் அனைவரும் இதுகுறித்து தெரிந்திருக்க வேண்டும்.

ஐஏஎஸ் வெற்றி வரையரைகள் :

பாடங்களை சரியாக பிரித்து படிக்க வேண்டும். அதன் நுணுக்கங்கள் திறம்பட படித்து தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும். நீங்கள் எந்த அளவிற்கு சிறப்பாக செயல்படுகின்றிர்களோ அந்த அளவிற்கு வெற்றி பெறுவீர்கள்.

நுணுக்கங்களை தெளிவாக தெரிந்து கொண்டு செயல்படுங்கள் அதன் மூலம் நீங்கள் சிறப்பான மதிபெண்கள் பெறலாம்.

 

காலத்தை முறையாக கடைப்பிடித்தல்:

ஐஏஎஸ் தேர்வில் கால நேரம் என்பது மிக முக்கியமானது ஆகும். நேரத்தை வீணாக்கதீர்கள் மற்றும் தேவையற்ற மன உலைச்சலை போக்குதல் மிக முக்கியமாகும். கடின உழைப்பை விட ஸ்மார்ட் உழைப்பில் மிகுந்த கவனம் செலுத்துங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

சிசாட் பிரிபேரசன்:

பொது அறிவுக்கு முக்கியதுவம் கொடுப்பது சீ சாட் தேர்வு என்பது தகுதி மதிபெண்கள் கொண்டது. சி சாட் தேர்வு திறம்பட கால நேரத்திற்குள் முடிக்க டெஸ்டுகளில்  கொடுக்கப்படும் சிக்கலான, சாவாலான கணிதங்களை போட்டு பயிற்சி செய்தால் தேர்வில் எந்த வித சிக்கலுமின்றி எழுதலாம்.  

காம்பிரிகென்சன்:

சிசாட் தேர்வில் ரீசனிங், ஆப்ஸ் மற்றும் ஆங்கில காம்பிரிகென்சன் வரும் அது தொடர்பான டிரிக்குஸ்கள் பயிற்சிகள் செய்து கொண்டு கேள்விகளை நாம் தொடலாம். போட்டி தேர்வுக்கு இது தொடர்பான நேரத்தை செலவழிக்கவும் மேலும் தேர்வு காலத்தில் சீசாட் தாளுக்கு பலர்சரியாக  நேரம் ஒதுக்குவதில்லை அது தவறான நடைமுறை அதனை நாம் உணர்ந்து செயல்பட்டு படித்தல் நல்லது.

சார்ந்த பதிவுகள்:

கேந்திர வித்யாலயாவின் ஆசிரியப் பணிக்கான அறிவிப்பு

English summary
The article tells about tips to win IAS Exams

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia