தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள இளநிலை மின் பொறியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/resources/docs/templescroll_doc/38271/3161/document_1.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்தான் தற்போது
இளநிலை மின் பொறியாளர் பணியிடம் காலியாக உள்ளது.

இளநிலை மின் பொறியாளர் பணியிடத்துக்கான கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து மின் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இளநிலை மின் பொறியாளர் பணியிடத்துக்கான சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.35900 - 113500/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவது பூர்த்தி செய்து இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் - 628215, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு 14.02.2024 க்குள்
விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/resources/docs/templescroll_doc/38271/3161/document_1.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












