பள்ளிக் கல்விக்கான உதவித்தொகை பெற மாணவிகள் மட்டும் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று தமிழகத்தின் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுதொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற https://namakkal.nic.in/ta/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
நாமக்கல் நகரில் அமைந்துள்ள மலைக்கோட்டையானது நாமக்கல் மாவட்டத்தின் சிறப்பம்சமாகும்.
மலையின் மீது அமைந்துள்ள பாழடைந்த கோவிலின் வடமேற்கு மற்றும் தெற்கு சுவறுகளில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் நாமக்கல் பகுதி 'திருவரைக்கல்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு அனுப்பப்படும் முட்டைகள் நாமக்கல் பகுதியில் உற்பத்தி செய்யப்படுவதாலும், நாமக்கல் ' கோழிகள் நகரம்' என்றும், 'முட்டை நகரம்' என்றும் அழைக்கப்படுகிறது.
நாமக்கல் நகரில் அமைந்துள்ள மலைக்கோட்டையானது இந்நகரத்தின் சிறப்பம்சமாகும்.இக்கோட்டையானது சமதளமான பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தென்மேற்கு திசையில் அமைந்துள்ள குறுகலான படிகளின் மூலம் இக்கோட்டையை சென்றடைய முடியும். ஒருகாலத்தில் நாமக்கல் பகுதியானது பல்லவ வம்சத்தில் மணம்புரிந்திருந்த அட்டிக்குல மன்னன் குணசீலா என்பவரின் ஆட்சியில் இருந்துள்ளது.
பின்னர் 9ம் நூற்றாண்டில் கொங்கு மண்டலத்தின் மீது படையெடுத்து வென்ற சோழர்களின் ஆட்சியின் கீழ் இருந்து, பின்னர் விஜயநகர பேரரசின் ஆளுகையின் கீழமைந்த மதுரா பதில் ஆளுநர் அலுவலின்கீழ் இருந்து வந்துள்ளது. அதன் பின்னர், ஹைதர் அலியின் படைத்தலைவர்களில் ஒருவரால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு, 1768 ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தின் வடக்கு பகுதிகள் மலைப்பிரதேசமானவும், தெற்கு பகுதிகள் சமவெளிகளாகவும் காணப்படுகின்றன.
இந்த நாமக்கல் மாவட்ட மாணவிகளுக்காக தற்போது இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கல்வி உதவித்தொகை தொடர்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளி கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 9, 10--ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தைச் சாா்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது தமிழக அரசு, மத்திய அரசு இணைந்து வழங்கும் கல்வி உதவித்தொகைத் திட்டமாகும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற அந்த மாணவிகளின் பெற்றோரின் அதிகபட்ச ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 4 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 9, 10-ஆம் வகுப்பில் பயிலும் மாணவிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது அஞ்சல் வங்கிகளில் தங்களது பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கியிருப்பதுடன், அதை ஆதாா் எண்னுடன் இணைத்திருக்க வேண்டும்.
ஆதாா் எண், வங்கி விவரங்களை வருமானச் சான்று மற்றும் ஜாதிச் சான்று நகல்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா்களிடம் சமா்ப்பிக்க வேண்டும். அரசுப் பள்ளித் தலைமையாசிரியா்கள் மாணவிகளது விவரங்களை இஎம்ஐஎஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்தத் திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகலாம்.
மேலும், 04286--280193 என்ற எண்ணை தொடா்பு கொண்டும் பயனடையலாம்.
இவ்வாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி:
கல்வி உதவித்தொகை தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற https://namakkal.nic.in/ta/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications

