டெரிடோரியல் ஆர்மியில் பணி வாய்ப்பு!

Posted By: Kani

நாக்பூரில் உள்ள டெரிடோரியல் ஆர்மி என்னும் ராணுவத் துணைப் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப படஉள்ளன. இதற்கு தகுதியானர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பணியின் பெயர்: சோல்ஜர்

காலியிடம்: 28

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: ஷேப்

காலியிடம்: 01

3. பணியின் பெயர்: டிரேடு மேன் (Equioment Repairer)

காலியிடம்: 01

4. பணியின் பெயர்: டிரேடு மேன் (Tailor)

காலியிடம்: 01

2 முதல் 4 வரையிலான பணிகளுக்கான கல்வித்தகுதி: 10 வகுப்பு தேர்ச்சி. சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட நான்கு பணிகளுக்குமான சம்பளம், வயதுவரம்பு, உடற்தகுதி, உடற்திறன் தேர்வு விவரம் பின்வருமாறு.

சம்பளம்: ரூ.21,000

வயதுவரம்பு: 18 முதல் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உடற் தகுதி:


உயரம்:160 செ.மீ

எடை: 50 கிலோ

மார்பளவு: 77-82 செ.மீ
மார்பு 5 செ.மீ சுருங்கி விரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

உடற்திறன் தேர்வு:  1.6 கீ.மீ தூரத்தை 5 நிமிடம் 40 நொடிகளுக்கள் ஓடிக்கடக்க வேண்டும்.
பீம்- 10, 9 அடி பள்ளத்தை தாண்ட வேண்டும், ஷிக் ஜாக் பேலான்ஸில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு: 18 முதல் 21 வயதிற்குள் இருக்கும் திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும். கிராம நிர்வாக அதிகாரியிடம் (vao) பெற்ற திருமணமாகாத சான்றை நேர்முகத்தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

18 வயது பூர்த்தியடையாதவர்கள் மற்றும் 42 வயது பூர்த்தியடைந்தவர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.

டெரிடோரியல் ஆர்மியில் பணி வாய்ப்பு!

தேர்ந்தெடுக்கப்படும் முறை: உடற்தகுதி உடற்திறன் தேர்வு, மருத்துவபரிசோதனை மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பணிக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு 9 மாதங்கள் பயிற்சியின் போது மாதம் ரூ.14,600 உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வின் போது 8 புகைப்படங்கள், மாற்றுச்சான்றிதழ்(TC), கல்வித்தகுதி சான்றுகள், இருப்பிடச் சான்றுகள், நன்னடத்தை சான்று, திருமணமான/திருமணமாகாத சான்று, என்சிசி சான்று, எக்ஸ்-எஸ்எம் சான்று மற்றும் தேவையான அனைத்து சான்றுகளின் அசல்களை இணைத்து சமர்பிக்க வேண்டும்.

சான்றுகள் அனைத்தும் ஹிந்தி/ ஆங்கிலத்தில் இருருக்க வேண்டும்.

உடற்தகுதி உடற்திறன் தேர்வு நடைபெறும் நாள்: 27-03-2018
மருத்துவப்பரிசோதனை மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 28-3-2018, 30-03-2018

தேர்வு நடைபெறும் இடம்: நாக்பூர்

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து 

English summary
Territorial army Recruitment: Apply For Various Posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia