Tn Govt Noon Meal Program Recruitment 2022
சிவகங்கை மாவட்ட சத்துணவு திட்ட பிரிவில், திருப்பத்தூர், எஸ்.புதூர், சாக்கோட்டை, கண்ணங்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், காலியாக உள்ள கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பக்கலாம் என, அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நிர்வாகம் : சிவகங்கை மாவட்டம் சத்துணவு திட்ட பிரிவு(Sivaganga District Noon Meal Program)
மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்
Ø கணினி இயக்குபவர்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.11.2022( நாளை கடைசி)
கல்வி தகுதி
Ø கணினி இயக்குபவர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் M.S. Office அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். இளநிலை தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
கணினி இயக்குபவர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் ரூ.12,000/- வழங்கப்படும். இப்பணியிடம் பகுதி நேர அடிப்படையில், முற்றிலும் தற்காலிகமானது. ஒரு வருட காலத்திற்கு மட்டுமே இப்பணியிடம் அனுமதிக்கப்படும்.
நோட் இட் ப்ளீஸ்....!
Ø பணி நியமனம் செய்யப்படும் பணியாளர்கள் வேலை திருப்திகரமாக இருப்பின் பணியிடத்துக்குரிய பணி தொடர் ஆணை பெறப்பட்டு, பணி காலம் நீட்டிப்பு வழங்கப்படும்.
Ø இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. எந்தவித முன்னுரிமையோ அல்லது பணி நிரந்தரம் செய்ய கோரவோ இயலாது.
Ø இப்பணியிடம் அரசு அனுமதிக்கும் காலம் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் காலம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
வயது வரம்பு
கணினி இயக்குபவர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 01.10.2022 அன்று குறைந்தபட்ச வயது 18யை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
பொது வகுப்பினர் 30 வயதுக்குள்ளும், மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 32 வயதுக்குள்ளும், ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு அதிகபட்ச வயது 35 வயதுக்குள்ளும் இருத்தல் அவசியம். இதர வகுப்பை சேர்ந்த மாற்று திறனாளிகளுக்கு 10 ஆண்டு வயது வரம்பு சலுகை உண்டு. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு முறை
கணினித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்.
மறக்காதீங்க...!
Ø இணையவழி விண்ணப்பத்தை 15.11.2022 அன்று மாலை 5:45 மணி வரை மட்டுமே சமர்ப்பிக்க இயலும், அதன் பின்னர் அச்சேவை நிறுத்தப்படும்.
https://agaram.tn.gov.in/wlcopen/formpage_open.php?id=43-172 என்ற அதிகாரப்பூர்வ இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்துடன் கோரப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு சலுகை, இதர கல்வித் தகுதி போன்ற இன்ன பிற முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட தமிழ் அறிவிப்புகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
க்ளிக் ப்ளீஸ்....! ஆல் தி பெஸ்ட்...!
chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2022/11/2022110136.pdf


Click it and Unblock the Notifications












