TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!

TNTET Paper-II Exam Date

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் - II க்கான கணினி வழித் தேர்வு தேதியை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வு அட்டவணை, அனுமதிச்சீட்டு (Admit card) குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

நிர்வாகம் : ஆசிரியர் தேர்வு வாரியம்

மேலாண்மை : மாநில அரசு

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 எப்போது...!

தேர்வு விவரம்

· தாள்-II

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர, மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.

நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 ஆகியவற்றுக்கான அறிவிப்பு கடந்தாண்டு மார்ச் வெளியிடப்பட்டது.

விண்ணப்பதாரர்கள்‌ இணையதளம்‌ வாயிலாக, ஏப்ரல் 26ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு தாள் ‌1-க்கு 2லட்சத்து 30ஆயிரத்து 878 பேரும், தாள் 2-க்கு 4 லட்சத்து ஆயிரத்து 886 பேர் என, மொத்தம் 6 லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்தனர்‌.

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் அக்டோபர் 14 முதல் 19ஆம் தேதி வரை இரு வேளைகளில்‌ நடத்தப்பட்டது.
கணினி வழியில் நடைபெற்ற தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுதினர்.

இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள்-2 பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை இரு வேளைகளில்‌ நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு 2ஆம் தாள் பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 14 வரை கணினி வழியில் மட்டுமே நடத்தப்பட உள்ளது.

பயிற்சித் தேர்வு

கணினி வழித்‌ தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சித் தேர்வை மேற்கொள்ள விரும்பும்‌ தேர்வர்கள்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணைய தளத்தில்‌ பயிற்சியினை மேற்கொள்ளலாம்.

இதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும்‌. அனைத்து தேர்வர்களும்‌ இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம்‌.

அட்டவணை எப்போது?

தேர்வு கால அட்டவணை மற்றும்‌ அனுமதிச் சீட்டு‌ வழங்கும்‌ விவரம் அறிவிக்கப்படும்‌.

தேர்வு குறித்த முழு விவரங்களுக்கு கிளிக் ப்ளீஸ்....!

https://trb.tn.nic.in/

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNTET Paper II Exam Date: The Teacher Examination Board has released the Paper-II Dates for Teacher Eligibility Test called 'TET'. The exams will be conducted through computer mode from February 3 to February 14.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X