33 வட்டார கல்வி அலுவலர் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பால் மகிழ்ச்சி

33 வட்டாரக் கல்வி அலுவலர்கள் (பிஇஏ) தேர்வு செய்து பணியில் அமர்த்தப்படவுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) அறிவித்துள்ளது. இதனால் அந்தப் பணிக்காகக் காத்திருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (Teachers Recruitment Board) தலைவர்

ளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

2019 - 2020 முதல் 2021 - 2022ஆம் ஆண்டுகளில் வட்டாரக் கல்வி அலுவலர் 33 காலிப்பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக விண்ணப்பதாரர்கள் 12.7.2023 வரை தேர்விற்கு ஆன்லைன் மூலம் 42 ஆயிரத்து 716 பேர் விண்ணப்பம் செய்தனர்.

33 வட்டார கல்வி அலுவலர் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பால் மகிழ்ச்சி

மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது இணைய வழி விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்க கோரியதன் அடிப்படையில், வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள், தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால், 13.7.2023 முதல் 17.7.2023 வரை திருத்தம் செய்ய (Edit Option) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட போட்டித் தேர்வை, கம்ப்யூட்டர் மூலம் 2023 செப்டம்பர் 10ஆம் தேதி நடத்தியதில், 35 ஆயிரத்து 403 பேர் தேர்வு எழுதினர். சிலர் தேர்வு எழுத வரவில்லை. வட்டாரக் கல்வி அலுவலருக்கான கம்ப்யூட்டர் தேர்வின் OMR (Optical Mark Reader) வழியில் நடத்திய போட்டித் தேர்வு முடிவுகள், ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் 9.11.2023 அன்று வெளியிடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, பணிநாடுநர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், ஆவணங்கள் மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், ஆவணங்களின் அடிப்படையில், விண்ணப்பதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டன.

இதுதொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டுள்ள பாடங்களுக்கு ஒரு பணியிடத்திற்கு 1:1.25 என்ற விகிதாச்சாரப்படி, 14.12.2023 (50 பணிநாடுநர்கள்) மற்றும் 4.1.2024 அன்று (ஒரு பணிநாடுநர்) சான்றிதழ் சரிபார்ப்புக்காக மொத்தம் 51 பணிநாடுனர்கள் அழைக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து தற்போது வட்டாரக் கல்வி அலுவலருக்கான பணித் தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்து, 33 பேர் இனச் சுழற்சிகளுக்கான பணிநாடுநர்களின் தற்காலிக தேர்வுப் பட்டியல் 1 (Provisional Selection List) வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு டிஆர்பி தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனால் இந்தப் பணிக்காகக் காத்திருந்தவர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர். அவர்கள் விரைவில் பணியில் சேர்வார்கள் என டிஆர்பி அறிவித்துள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Teacher’s Recruitment Board (TN TRB) has released the TN TRB BEO Recruitment 2023 Notification for 33 Posts last year. TRB has now selected 33 BEO-s for the posts. The list has been released by TRB. For more details please login into
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+